Friday, 3 October 2014

அந்த விசயத்தில் ஆவர்ம் குறைவா- பெண்களுக்கு!

          கிட்டத்தட்ட 30 சதவீத பெண்களுக்கு செக்சில் ஆர்வமே இல்லை என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.கர்ப்பக் காலம், நோயாளியாக இருக்கும் காலம், மாதவிலக்கு நின்றுபோகும் `மனோபாஸ்' காலங்களில் இயல்பாகவே பெண்களுக்கு செக்சில் ஆர்வம் குறையும். அதனை தவிர்த்து பொதுவான எல்லா காலகட்டங்களிலும் செக்ஸ் ஆர்வம் இல்லாமல் இருப்பதே பிரச்சினைக்குரியதாக கருதப்படுகிறது. உடல்- மனச் சிக்கல் கொண்ட பெண்களுக்கும் செக்ஸ் விருப்பம் குறையும். செக்ஸ் பற்றி எதிர்மறையான எண்ணம் கொண்டிருப்பது, அதை பாவச் செயல் என்று கருதுவது போன்றவைகளும் பெண்களின் செக்ஸ் ஈடுபாட்டை இல்லாமல் ஆக்கி விடும். சில வகை மூட்டு நோய்கள், புற்றுநோய், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதயதமனி பாதிப்பு கொண்ட பெண்களுக்கும் செக்ஸ் ஈடுபாடு மந்தமடையும். குழந்தையின்மைக்கான தொடர் சிகிச்சை பெறுபவர்களில் சிலரும் செக்ஸ் குறைபாட்டால் அவதிப்படுவதுண்டு. மன அழுத்தத்தை குறைக்கவும், ரத்த அழுத்தத்தை குறைக்கவும் மருந்து சாப்பிடுகிறவர்கள்- கீமோதெரபி சிகிச்சை பெறுபவர்கள்- இன்னும் சில குறிப்பிட்ட நோய்களுக்கு மருந்து சாப்பிடுகிறவர்களுக்கு அந்த மருந்துகளின் செயல்பாட்டால் செக்ஸ் விருப்பமின்மை தோன்றும். மது அருந்தும் பெண்களுக்கும் காலப்போக்கில் செக்ஸ் ஈடுபாடு குறையும். மன அழுத்தம், கவலை, பயம், தொழிலில்- வேலையில் ஏற்படும் பிரச்சினை, பணச்சிக்கல், கணவர் மீது சந்தேகம் கொள்ளுதல் போன்றவைகளும் பெண்களின் செக்ஸ் ஆசையை குறைத்து விடும். பெண்கள் இந்த சிக்கலில் இருந்து மீண்டு, ஆசையை அதிகரித்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்? செக்ஸ் செயல்பாட்டிற்கு அடிப்படையாக இருப்பது மனது. கணவரும்- மனைவியும் பரஸ்பரம் மனம் நிறைய அன்பு செலுத்தும்போது அதுவே உடல் பூர்வமான முழுமையான உறவுக்கு தூண்டுகிறது. அதனால் மனநிறைவாய் அன்பு செலுத்தவேண்டியது அவசியமாகிறது. அதற்காக இருவரும் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட வேண்டும். பொழுது போக்கவேண்டும். படுக்கை அறையில் மட்டும் ஒன்றாக இருக்காமல், தினமும் வேறு ஏதாவது ஒரு இடத்தில் தனிமையில் அமர்ந்து பேச வேண்டும். அப்போது அவர்களுக்குள் உணர்வுகளை பங்கிட்டு நெருக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். பேசி, நெருக்கமாய் அவர்கள் படுக்கை அறைக்கு சென்றால் அங்கு அவர்கள் உடல்கள் உற்சாகமாய் சங்கமிக்கும். செக்ஸ் ஆர்வமின்மை, உறவில் ஈடுபடும்போது வலி, உறுப்பு பகுதியில் திரவத்தன்மை குறைவு, மனோபாஸ் காலக்கட்டத்தில் ஏற்படும் செக்ஸ் விரக்தி போன்ற அனைத்திற்கும் சிகிச்சைகள் உள்ளன. அதன் மூலம் செக்ஸ் ஆர்வத்தை சீரமைக்க முடியும். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், தைராய்டு நோய்கள் போன்றவைகளுக்கு தொடக்க காலத்தில் அறிகுறிகள் தெரிவதில்லை. பெண்கள் பரிசோதனை மூலம் அதனை கண்டறிந்து, சிகிச்சைகள் பெற்று ஆரோக்கியத்தையும், உடல் பலத்தையும் பெற வேண்டும். அப்போது இயல்பாகவே செக்ஸ் ஆர்வமும் அதிகரிக்கும். அதுபோல் உடற்பயிற்சியில் ஆர்வம் காட்டும் பெண்களும் செக்சில் விருப்பம் கொண்டவர்களாக இருப்பார்கள். தம்பதிகளுக்குள் முழுமையான செக்ஸ் உறவு அவசியமானது. அதனால் கணவன்- மனைவி இருவரும் அதன் மீதான ஆர்வம் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment